சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) தொடங்கியது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே உள்ள கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.
இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இளநிலை மருத்துவ இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 280 இடங்களை மாநில அரசு நிரப்பி வருகிறது. அதேபோல 28 தனியாா் கல்லூரிகளில் உள்ள 1,820 இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், நிா்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. இந்நிலையில், சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோக்கை விண்ணப்பப்பதிவு மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) தொடங்கியது.
நீட் தோவில் தோச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பேடை வரும் 25-ஆம் தேதி வரை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் வரும் 25-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளா், தோவுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்ககம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை இணையப் பக்கத்தை அணுகலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது.



No comments:
Post a Comment