நடப்பாண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப இயக்குநரத்தில் பொறியியல் கலந்தாய்வு குறித்து அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். பிறகு அண்ணா பல்கலைகழகம் அரங்கத்தில் அனைத்து தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடனான கலந்தாய்வு கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தன்னாட்சி கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி கூறியதாவது;
பொருளியல் முதல் கலந்தாய்வு கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நேற்றோடு முடிவடைந்தது. நாளை முதல் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்தலாம். முதல் சுற்றில் 22,000 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் 16,500 இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
OC- 7305 ,BC - 4237, BC MUSLIM -452, MBC-2666, SE -66 SEA -62, ST -09, மொத்தமாக 15,497 தேர்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கலந்தாய்வு வரும் ஐந்தாம் தேதிக்கு பிறகு தொடங்கும். அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 1,019 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு கலைக் கல்லூரியில் பொருத்தவரை கலந்தாய்வு நிறைவு நடைபெற்றது 164 அரசு கலைக் கல்லூரிகளில் 1,11,300 மாணவர்கள் இருக்கின்றனர். அதில் 1,01,416 சேர்த்துள்ளனர். இன்னும் 9,830 சீட்டு நிரப்பாமல் உள்ளது
அரசு கலைக் கல்லூரிகளில் 45,409 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு கலைக் கல்லூரிகளில் புதுமை பெண் திட்டத்தின் அறிவித்திருந்த நிலையில் 56,000 பேர் சேர்ந்துள்ளனர். இது புதுமை பெண் திட்டத்தின் சாதனை. அனைத்து கல்லூரிகளில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் 3,10,000 பெண்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
கல்லூரி முதல்வர்களிடம் புதிய பாடத்திட்டம் பற்றி ஆலோசனை செய்ததில் அனைவரும் வரவேற்கின்றனர். 100 சதவீதம் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் 10 சதவீத கல்லூரிகளில் கூடிய விரைவில் கொண்டு வரப்படும். புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரப்படும் என கடந்த ஆண்டு
சட்டமன்றத்தில் கூட அறிவித்திருந்தோம். இந்த புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர 900 கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்து பிறகுதான் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த புதிய பாடத்திட்டம் பொதுவாக மாணவர்களின் வளர்ச்சியை அதிகரிக்க தான் கொண்டு வந்துள்ளோம்
ஒரு கல்லூரியில் இருந்து இன்னொரு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாடம் கற்பது கடினமாக உள்ளதாக தெரிவித்தனர். அது போன்று இருக்கக் கூடாது என இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இது மாணவர்களின் கோரிக்கையாகும். முதலமைச்சர் கூறியது கல்வியின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கக் கூடாது, கல்வி தரத்தையும் உயர்த்த வேண்டும் என்று தான் எங்களுடைய நோக்கம். அரசு கல்லூரிகளில் படித்தவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அதனால் தான் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
75 சதவீதம் புதிய பாடத்திட்டத்தை கல்லூரிகளில் செயல்படுத்த வேண்டும். மீதமுள்ள 25 சதவீதம் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தை நடத்திக் கொள்ளலாம். ஒரு ஜனநாயகத்தின் அடிப்படையில் தான் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் பட்டமளிப்பு விழா நடத்துவது குறித்து யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் கேளுங்கள். கடந்த
ஐந்து வருடங்களாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தாமல் இருந்தது இந்த ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்.
No comments:
Post a Comment