அரசுப் பள்ளிக்கான நன்கொடைகளை ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தனி நபர்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் அரசு பள்ளிகளுக்கு தேவையான வசதிகளைச் செய்து தருவது, இலவச நூல்கள், இதழ்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வருகின்றனர்.
அத்தகைய செயல்பாடுகளை ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ மூலமாகவே வழங்குமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும், அதற்கு பவுண்டேஷன் அனுமதி வழங்கிய பின்னரே தங்கள் மாவட்டத்தில் அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment