Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 16, 2023

ஐடிஐ முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்று: அக்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்


ஐடிஐ படித்தவர்கள், மேற்படிப்புக்காக 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விரும்பினால் வரும் அக்டோபர் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்தாண்டு மார்ச் 30-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள், மேற்படிப்பை தொடர 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்றஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அகில இந்திய தொழிற் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின்கீழ் நடத்தப்பட்ட மொழித் தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 10-ம் வகுப்புமற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்துஉரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள பொறுப்பு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ தபால்மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஆய்வு செய்து, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள்இயக்ககத்தில் இருந்து தகுதிக்கேற்ப 10-ம் வகுப்பு / 12-ம்வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் இதற்கென நியமிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் வரும் அக். 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment