

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி!
பேரணியில் பங்கேற்க தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினமே ஆழிப் பேரலையாய் அணி திரண்டு வாரீர்!
வங்கக் கடலை தோற்கடிக்கும் சங்கக்கூட்டம் இதுவென சிங்கக் கூட்டமாய் சிலிர்த்தெழுந்து வாரீர்!
போர்க்குணமிக்க இயக்கத்தின் போராட்டக்களம் நோக்கிப் புயலென புறப்பட்டு புதிய வரலாறு படைத்திட வாரீர்!
பத்தாயிரம் பேர் பங்கேற்கும் வரலாற்று நிகழ்வில் தடம் பதித்து இடம் பிடிக்க தன்னெழுச்சியுடன் வாரீர்!
போராடும் இயக்கத்தின் போராட்டக் களத்தை கூர்மையாக்கிட வீறு கொண்டெழுந்து விண்ணதிர வாரீர்!
No comments:
Post a Comment