Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 18, 2023

உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் உள்ளதா!!? உடனே மருத்துவரை அணுக வேண்டும்!!!


உங்களுக்கு வாந்தி, மஞ்சள் நிறக்கண்கள் போன்ற 5 அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தற்போது மாறி வரும் உணவுப் பழக்கம் மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. அந்த பாதிப்புகள் ஒன்று தான் கல்லீரல் பாதிப்பு. இந்த கல்லீரல் பாதிப்பு குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும். மேலும் பல காரணங்களால் உடலில் உள்ள முக்கிய உறுப்பான கல்லீரல் பாதிக்கப்படுகின்றது.

நமக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளது என்பதை 5 அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். அதாவது வாந்தி, மஞ்சள் நிறம் உள்ள கண்கள், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் போன்ற ஐந்து அறிகுறிகளை வைத்து கல்லீரல் பாதிப்பு இருக்கின்றதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்.

* தோலில் அரிப்பு

ஒரு சிலருக்கு தோலில் அரிப்பு ஏற்படும். இந்த தோல் அரிப்பானது கல்லீரல் இரத்தத்தை சுத்தகரிக்காமல் இருந்தால் ஏற்படும். கல்லீரலில் பாதிப்பு இருந்தால் கல்லீரல் இரத்தத்தை சுத்தம் செய்யாமல் இருக்கும்.

* மஞ்சள் நிறக் கண்கள்

ஒரு சிலருக்கு கண்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். இது கல்லீரலில் இருக்கும் பாதிப்பை உணர்த்துகின்றது. கல்லீரல் உற்பத்தி செய்யப்படும் பிலிரூபின் என்பது குவிந்தால் மஞ்சள் காமாலை வரும்.

* வெளிர் நிறத்தில் மலம்

கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு மலம் வெளிர் நிறத்தில் வெளியேறும். கல்லீரலில் ஜீரணத்திற்கு உதவி செய்யும் பைல் எனப்படும் ஒன்று சுரக்கும். இந்த பைல் சுரக்கவில்லை என்றால் வெளிர் நிற மலம் வெளியேறும்.

* சிறுநீரின் நிறம் மஞ்சளாக வெளியேறும்

கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியேறும். கல்லீரல் சுத்திகரிக்கும் வேலையை சரியாக செய்யாமல் விட்டால் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.

* வாந்தி

கல்லீரல் பாதிப்பு இருந்தாலோ அல்லது செயல் இழந்தாலோ வாந்தி ஏற்படும். அதாவது கல்லீரல் செயல் இழந்தால் செரிமானம் நடக்காது. இதனால் அவர்களுக்கு வாந்தி ஏற்படும்.

மேற்கூறிய இந்த 5 அறிகுறிகளும் ஒருவருக்கு இருந்தால் அந்த நபர் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment