ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கு அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது பழக்கம்.
அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதன் தன்மைகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதற்கு சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன.
ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தன்னுடைய குழந்தைக்கு A என்ற எழுத்தில் பெயர் வைக்கவே விரும்புகிறார்கள். ஆங்கில எழுத்துக்களிலேயே A என்பது முதலெழுத்து, எல்லாவற்றிலும் தன்னுடைய குழந்தை முதன்மையாக இருக்க வேண்டும் என்று பல பெற்றோர்களும் தேர்வு செய்கிறார்கள். A என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கோபுர வடிவ எழுத்து - மன தைரியம், குறிக்கோள், முயற்சி, வெற்றி :
ஆங்கிலத்தில் A என்ற எழுத்து என்பது கோபுர வடிவத்தில் இருக்கும். இந்த எழுத்தில் பெயர் தொடங்குபவர்களுக்கு, இளம் வயதிலிருந்தே லட்சியம் இருக்கும். மற்ற குழந்தைகளை விட இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள். சுதந்திர மனப்பான்மையை அதிகமாக விரும்புவார்கள். தனித்து செயல்படுவதில் தீவிரமான ஆர்வம் இருக்கும், தேவைப்பட்டால் மட்டுமே உதவியை பெறுவார்கள். இவர்களுக்கு மன தைரியம் மற்றும் வில் பவர் என்று சொல்லக்கூடிய எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவம் மிக மிக அதிகம். ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதை நிறைவேற்றாமல் விடமாட்டார்கள். கோபுர வடிவ முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றிகளைக் குவிக்கும்.
எல்லாவற்றிலுமே ஒரு இலக்கை வைத்து செயல்படும் இவர்களுக்கு அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையும் கிடையாது. பல நேரங்களில் இவர்கள் நேர்மையாக இருப்பது மற்றவர்களை காயப்படுத்துவது போல தோன்றும்.
A என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்களின் பலம் :
1. தனக்காக விதிகளை நிர்ணயித்துக் கொள்வார்கள்
2. எப்போதுமே இலக்குகளை வைத்து செயல்படுவார்கள்
3. முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்
4. தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள்
5. யார் கூறுவதையும் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்
6. மிகப்பெரிய வெற்றி பெறும் அமைப்பு கொண்டவர்கள்
7. முன்னிலை வகிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்
8. மிகப்பெரிய ஆளுமைத் தன்மை கொண்டவர்கள், தனித்து தெரிவார்கள்
A எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்களின் பலவீனம் :
விருப்பு வெறுப்பு என்பதில் மிகவும் தெளிவாகவும் தன்னுடைய கண்ணோட்டத்தில் இருந்து எந்த விஷயத்திலுமே மாறாமல் இருப்பார்கள். இதுவே இவர்களுக்கு மிகப்பெரிய பலவீனமாகவும் இருக்கிறது.
சூழ்நிலைக்கேற்றவாறு புரிந்து கொண்டு கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும் ஆனால் இவர்களிடம் அந்த அளவுக்கு நெகிழ்வுத்தன்மை கிடையாது.
சில நேரங்களில் இவர்களுடைய பலமே பலவீனமாகவும், பலவீனம் பலமாகவும் மாறி விடுகிறது. உதாரணமாக இவர்கள் சுயநலவாதிகள் மற்றவர்கள் சொல்வதை இவர்கள் பெரும்பாலும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். இது சில நேரங்களில் இவர்களுக்கு பாதகமாக இருந்தாலும் சுயநலத்தன்மை இவர்களை தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வைக்கிறது.
அதேபோல மற்றவர்கள் சொல்லும் விஷயத்தை கேட்காமல் இருப்பது மற்றவர்களால் இன்ஃப்ளூயென்ஸ் ஆகும் தன்மையை தவிர்க்கிறது. இதனால் தங்களுடைய தனித்திறனை இவர்கள் மிக எளிதாக வெளிப்படுத்துவார்கள். இருப்பினும், அனுபவசாலிகளின் ஆலோசனைகளை தவிர்ப்பது சில நேரங்களில் இவர்களுக்கு பிரச்சனையாக முடியும்.
1.சுயநலவாதிகள்
2. அனைவரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்
3.நெகிழ்வுத்தன்மை இல்லாதவர்கள்
4. தான் நினைத்தது தான் சரி என்ற பிடிவாதம் இருக்கும்
5. மாற்றத்தை எதிர்கொள்வது கடினம்
6. கொஞ்சம் சரிவு/தோல்வி ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்
கடின உழைப்பாளிகள் :
வேலை என்றாலும் சரி, தொழில் செய்தாலும் சரி, மிகவும் நேர்த்தியாக செயல்படுவார்கள். குறுக்கு வழிகள் இவர்களுக்குப் பிடிக்காது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் தேர்ந்தெடுக்கும் துறை இவர்களுக்கு பொருத்தமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். தன்னுடைய துறையில் தனித்து விளங்கும் ஆற்றலும் கொண்டிருப்பார்கள். பிரபலங்கள், மிகப்பெரிய ஆளுமைத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
நட்பு, குடும்பம் மற்றும் சமூகம் :
சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெற்றிருப்பார்கள். சில நண்பர்களே இருப்பார்கள். உறவுகளில் கூட ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பார்கள். தன்னுடன் ஒத்துப் போகும் நபர்களிடம் மட்டுமே நட்பு பாராட்டுவார்கள்.
காதல், திருமணம் என்பதில் கவனமாக தேர்வு செய்வார்கள். உறவில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகும் தன்மை இருக்கலாம்.
எண் கணிதம் மற்றும் வேத ஜோதிடத்தில் A என்ற எழுத்து - சூரியனின் காரகம்
A என்ற எழுத்து, எண் கணிதத்தில் எண் ஒன்றை குறிக்கிறது. எண் ஒன்று என்பது சூரியனைக் குறிக்கும் கிரகம், சூரியனின் காரகத்துவம் அனைத்துமே பொருந்தும். A என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு ஆளுமை திறன், தலைமைத்துவப் பண்பு, அதிகாரம், அரசியல் செல்வாக்கு ஆகிய அனைத்துமே நிறைந்து காணப்படும்.
A என்பது அதிர்ஷ்ட எழுத்து :
A என்பது அதிர்ஷ்டமான எழுத்தாகவும் கருதப்படுகிறது. நபர்களுக்கு மட்டுமல்லாமல், உலக அளவில் பிரபலமான பல நிறுவனங்களும் A என்ற எழுத்தில் பெயர் வைத்து, பல ஆண்டுகளாக தனித்துவமாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் மிகப்பெரிய சாதனை புரிந்தவர்கள், காலமுள்ளவரை மறக்காதவர்களின் பெயர்களும் A என்ற எழுத்தில் தான் தொடங்கும்.
உதாரணமாக, அசோகர், அலெக்சாண்டர், ஆப்பிள் நிறுவனம் போன்றவை.
No comments:
Post a Comment