Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 24, 2023

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் - ஆ. மிகாவேல் , ஆசிரியர்


ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் ..

ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை .

9047191706 .

ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு 1000 க்கும் மேல் மனு எழுதி கொடுத்துள்ளேன்.

என்னை அணுகி நான் வழக்கு தொடர உதவிய வழக்குகள் 500 ஐ தொடும் .பதவி உயர்வு வழக்கு மேல் முறையீடு செய்ய வேண்டாம் என கூறிய வழக்குகள் 50 ஐ தாண்டும் .Audit வழக்குகளில் , தேர்வு நிலை வழக்குகள் , இளையோர் மூத்தோர் ஊதிய நிர்ணய வழக்குகள் ,ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள், பணி வரன்முறை வழக்குகள் பங்களிப்பு செய்து வருகிறேன் . பழைய ஓய்வூதிய திட்டம் நீதி மன்ற தீர்ப்பின் மூலம் 20 பேருக்கு பெற்றுக் கொடுத்துள்ளேன் .

01.06.2009க்கு பிறகு பணியில் சேர்ந்த 30 பேருக்கு Fitment 1.86 நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொடுத்துள்ளேன் . அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற்றுக் கொடுத்துள்ளேன்

* வழக்குகளில் இரண்டு வாய்ப்புகள் தான் . வழக்கில் வெற்றி பெறுவது , வெற்றிகாக சரியான முறையில் போராடினோம் என்பது .

* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வு என்று வெவ்வேறு வழக்குகளில் இதுவரை 10 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர் .

* சீராய்வு Review பயன் தராது என்று பதிவு செய்துள்ளேன் . வழக்கு உச்ச நீதிமன்றம் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் Review பற்றி விரிவாக பதிவு தவிர்க்கிறேன்

* ஒரு குறிப்பிட்ட சங்கம் உச்ச நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது சரி . வழக்கு சார்ந்த எனக்கு உள்ள நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் கூறுகின்றேன் .

* உயர் நீதிமன்ற தீர்ப்பில் மாநில அரசின் உரிமை தொடர்பாக விரிவாக ஆராய பட்டுள்ளது .எனவே இந்த வழக்கில் அரசியல் சாசன வழக்கில் அனுபவமுள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வாதம் அவசியமாகிறது

.மற்ற சங்கங்கள் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரை அமர்த்துவது அவசியமாகும் .

* முதுகலை ஆசிரியர் , உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் PG பணியாற்றி பதவி உயர்வு பெற்றோரை பணி இறக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது . தற்போது இவர்கள் மூத்த வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்ற Review செய்துள்ளனர் . வழக்கு தள்ளுபடி செய்ய அதிக வாய்ப்பு உண்டு ஆனால் உச்ச நீதிமன்றம் இவர்களின் கோரிக்கையை ஏற்க வாய்ப்பு உண்டு .

* வழக்கை சரியான திசையில் நடத்தவில்லையெனில் தகுதித் தேர்வின்றி பதவி உயர்வு பெற்ற றோருக்கும் மேற்கண்ட பத்தியில் சுட்டிக்காட்டிய பிரச்சனை எழ வாய்ப்பு உண்டு .ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வாரம் ஒரு தீர்ப்பில் பாதுகாப்பு செய்துள்ளது .உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முன்பே Uதவி உயர்வில் சென்றோரை பணி இறக்கம் செய்ய கூடாது .

* ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தீர்ப்பு வந்தவுடன் எனது பதிவை பார்த்து , யூ டியூப் தளம் ஒன்று என்னை பேட்டி எடுக்க கேட்டனர் . விடுமுறை நாளில் தொடர்பு கொள்கின்றேன் என்று கூறி தொடர்பு கொள்ளவில்லை .இதை குறிப்பிட காரணம் பரபரப்பு காக பதிவு செய்வது எனது நோக்கம் அல்ல .

* வழக்கில் உள்ளதை உள்ளபடி பேசினால் தான் வெற்றி பெற முடியும் . பொய்யான நம்பிக்கை வெற்றி தராது .

* இந்த வழக்கோடு தொடர்புடைய 42 ஆசிரியர்களுக்கு வழக்கில் வெற்றி பெற எழுதி கொடுத்துள்ளேன் .மூத்த வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளனர் .

* அரசாணைகளை நீதிமன்ற தீர்ப்பின் வழியாக எப்படி புரிந்து கொள்வது , துறையால் வழங்க முடியாதவற்றை , வழங்க மறுப்பவற்றை நீதிமன்றம் மூலம் பெற்று தருவது என்ற காலமும் இயற்கையும் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் .

ஆ. மிகாவேல்

ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706

No comments:

Post a Comment