Saturday, September 16, 2023

நீங்க இந்த மாறி பொசிஷன்ல உக்காருவிங்களா.? அப்போ உங்க கேரெக்டர் இதுதான்..!

மனிதனின் இயல்பான செயல் என்னவென்றால் ஒருவரின் நடத்தையை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்வதுதான். அவ்வாறு நீங்கள் பேசுவது, ஒரு செயலை செய்வது போன்றவற்றை வைத்து உங்கள் மனதைப் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் நீங்கள் உட்காரும் நிலை என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அதை வைத்துக் கூட நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும்

அதன்படி தற்போது நீங்கள் உட்கார்ந்திருக்கும் தோரணையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை இப்பொழுது அறிந்து கொள்ளலாம். உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் ஐந்து விதமான உக்காந்திருக்கும் தோரணை உள்ளது. இதில் நீங்கள் எந்த தோரணையில் உட்காருவீர்கள் என்பதை வைத்து உங்களது பண்புகளை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.


1. முழங்கால் நேராக வைத்து உட்கார்ந்திருக்கும் தோரணை:

உங்கள் முழங்கால்களை நேராக வைத்து உட்கார்ந்திருக்கும் நிலை ஆனது நீங்கள் சரியான நேரத்தில் உங்களின் பகுத்தறிவு சிந்தனை மற்றும் நேர்மையை வெளிப்படுத்துவீர்கள் என்பதை காட்டுகிறது. உங்கள் வாழ்க்கையை பற்றி நேர்மறையான கண்ணோட்டத்தை கொண்டிருப்பீர்கள். நீங்கள் இவ்வாறு அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் பொது சமூகத்தில் இருந்து சற்று ஒதுக்கப்பட்டவர்களாக இருப்பீர்கள். எனவே, இதனால் தேவைப்படும் இடங்களில் மட்டும் நீங்கள் பேசுவீர்கள்.

முக்கிய பண்பு:

நேரம் தவறாமல் இருப்பது, பகுத்தறிவு சிந்தனை, நேர்மை, ஒழுக்கம், ஆரோக்கியம் போன்றவை உங்களுடைய முக்கிய பண்புகள் ஆகும்.


2. முழங்கால்களை அகற்றி வைத்து உட்காரும் தோரணை:

உங்கள் முழங்கால்களை அகற்றி வைத்து உட்காரும் இந்த இரண்டாவது தோரணையானது நீங்கள் சுயநலமாக இருக்கலாம் என்பதை காட்டுகிறது. உங்களைப் பற்றி மட்டுமே எப்பொழுதும் சிந்திக்கும் ஒருவராகவும், ஆடம்பரமாகவும் இருப்பீர்கள். நீங்கள் பொதுவாக ஒரு விஷயத்தில் குறைவான கவனத்தை கொண்டிருப்பீர்கள். உங்கள் கவலைகளை வெளியில் காட்டாமல் உள்ளுக்குள்ளே வைத்திருப்பீர்கள். நீங்கள் மிகவும் அன்பாகவும் இருப்பீர்கள். உங்களிடம் நல்ல நல்ல யோசனைகள் இருக்கலாம். ஆனால், அதை அதிகமாக சிந்தித்து, நடக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்ற பயத்தால் அதனை கைவிட்டுவிடுவீர்கள்.

முக்கிய பண்பு:

சுயநலம், திமிரு பிடித்தல், எந்த விஷயத்தையும் விரைவாக சலித்து விடும் போன்ற குணாதிசயங்களை கொண்டிருப்பீர்கள்.

3. கால் மேலே கால் போட்டு உட்காரும் தோரணை:

அடுத்ததாக கால் மேலே கால் போட்டு உட்காரும் தோரணை, இந்த தோரணையில் நீங்கள் உட்கார்ந்திருந்தால் மற்றவர்களுடன் சிறந்த உரையாடும் திறன் கொண்டவர். நீங்கள் எப்பவும் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். எந்த ஒரு உரையாடலையும் எளிமையாக கொண்டு செல்வீர்கள். மற்றவர்கள் எதை பேச முயற்சி செய்கிறார் என்பதை உங்களால் முடிந்தவரை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். நீங்கள் அனைவரிடமும் நட்புடன் இருக்கலாம், ஆனால் உங்களுக்கென சில நண்பர்களை உருவாக்காமல், உங்களது சொந்த எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளில் கவனம் செலுத்துவீர்கள்.

முக்கிய பண்பு:

கலை கனவு காண்பது கற்பனை திறன் நம்பிக்கை தன்மை தன்னம்பிக்கை நம்பிக்கை போன்றவை உங்களது முக்கிய பண்புகள் ஆகும்


4. கணுக்கால்களை குறுக்காக வைத்து உட்காரும் தோரணை:

அடுத்ததாக உங்கள் கணுக்கால்களை குறுக்காக வைத்து உட்காருவது உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் அயராது உழைப்பவர் என்பதை காட்டுகிறது. உங்களுக்கென ஒரு லட்சியத்தை வைத்துக்கொண்டு, அதனை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று குறிக்கோள் உடையவராக இருப்பீர். எந்த சூழ்நிலையிலும் அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பீர்கள். அதேபோல உங்களை சுற்றி உள்ளவரையும் தன்னம்பிக்கையுடன் உணர வைப்பீர்கள். ஒரு விஷயத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்காமல், நிதானமாக யோசித்து முடிவு எடுப்பீர்கள். நீங்கள் உங்களது தனிப்பட்ட கவலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்குவீர்கள். உங்களது மனைவியைத் தவிர வேறு யாருடனும் உங்களது விஷயங்களை பற்றி விவாதிக்க விரும்ப மாட்டீர்கள்.

5. லெக் லாக்கில் உட்காரும் தோரணை:


நீங்கள் லெக் லாக் செட்டிங் பொசிஷன், அதாவது உங்களது ஒரு கணுக்காலை மற்றொரு முழங்காலின் மேல் வைத்து உட்காருவது நீங்கள் நம்பிக்கை உள்ளவராகவும், அதிகாரத்தன்மையோடும், ஆதிக்கத்தோடும் இருப்பதை வெளிப்படுத்துகிறது. நீங்கள் ஆண் அல்லது பெண் என்பதை பொருட்படுத்தாமல் இவ்வாறு அமர்ந்திருந்தால் மற்றவர்களுடன் ஒப்பிடும்பொழுது நீங்கள் நிதானமாகவும், உங்களுக்குள் நீங்கள் திருப்தி அடைந்தவராகவும் இருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் தொழில் மற்றும் கல்விக்கு முன்னுரிமை அளிப்பவராக இருப்பீர்கள். மற்ற விஷயங்களில் நீங்கள் அலட்சியமாக இருந்தாலும், உங்களது மனைவிக்கு விசுவாசமாக இருப்பீர்கள்.

முக்கிய பண்பு:

நம்பிக்கை, ஆதிக்கம், விவாதம் மற்றும் போட்டி போடுவது உங்களது பண்புகளின் முக்கியமானவை ஆகும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News