தமிழக பள்ளிகளில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள்
தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி பாடங்களை எடுக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அன்புமணி ராமதாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு அல்லது பணிப்பாதுகாப்புடன் கூடிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வளாகத்தில் 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு ஒரு நாளுக்கு சராசரி ஊதியம் ரூ.333/- மட்டுமே வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மைத் தகவல்களை (Educational Management Information System – EMIS) பதிவு செய்யும் பணிகள் அவர்கள் மீது தான் சுமத்தப்படுகின்றன. நிர்வாக பணிகளும் அவர்கள் தான் செய்கிறார்கள். அவர்களை 12 ஆண்டுகளாக அதே நிலையில் வைத்திருப்பது நியாயமற்றது. எனவே அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment