Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 27, 2023

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!!


இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் தான்.முக்கியமான வீட்டு பூஜை அறைகளில் நாம் செய்யும் சிறு தவறு நம்மிடம் இருக்கும் செல்வத்தை ஏதோ ஒரு வழியில் கரைத்து விடும் அபாயத்தை ஏற்படுத்தி விடும்.இதற்கு பல தீர்வுகள் இருக்கிறது.நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு செல்வதை பெருக்கும் தன்மை கொண்டது.இது போன்ற சில செல்வதை பெருக்கி வாழக்கையை சிறக்க வைக்கும் சில வழிமுறைகள் கீழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.அதனை கடைபிடித்து நல்ல பலனை அடையுங்கள்.

செல்வம் பெருக வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருட்கள்:-

*ஒரு சுத்தமான பாத்திரம் எடுத்து அதில் 1/4 கைப்பிடி அளவு பச்சரிசி மற்றும் 1 ரூபாய் நாணயத்தை போட வேண்டும்.பிறகு அதில் கல் உப்பு நிரப்பி பூஜை அறையில் சாமி சிலை அல்லது போட்டோவுக்கு முன் வைக்க வேண்டும்.கல் உப்பு செல்வத்தை பெருக்கும் சக்தி கொண்டிருப்பதால் அதனுடன் நாணயம்,பச்சரிசி வைப்பதினால் வீட்டில் செல்வம் சேருவதில் தடை இருக்காது.

*அனைவரது வீட்டு பூஜை அறையிலும் காமாட்சி விளக்கு கண்டிப்பாக இருக்கும்.இந்த காமாட்சி விளக்கில் தீபம் ஏற்றும் பொழுது அதற்கு அடியில் தட்டு வைப்பது வழக்கம்.காரணம் எண்ணெய் வழிந்து செல்லாமல் இருக்கும்.இந்த தட்டில் சிறிதளவு பச்சரிசி மற்றும் 1 ரூபாய் நாணயம் வைத்து வழிபடுதல் அவசியம்.அதேபோல் மங்களகரமான மஞ்சள் துளை அரிசியுடன் கலந்து காமாட்சி விளக்கு உள்ள தட்டில் வைத்தால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி மகா லட்சுமி அருளால் செல்வம் பெருக தொடங்கும்.

மேலும் வீடு மற்றும் பூஜை அறையை சுத்தமாக வைத்து கொள்வது முக்கியமான ஒன்று.பூஜை அறைகளில் காய்ந்த பூ,மாலை,காய்ந்த எலுமிச்சை இருந்தால் அவற்றை முறையாக அப்புறப்படுத்தி விட்டு பின்னர் புது மலர்களை சாமி சிலைக்கு சாற்ற வேண்டும்.

பணப்பெட்டி,பணப்பை இருக்கும் இடத்தில் வாசனை நிறைந்த ஏலக்காய், துளசி, இலவங்கம், சோம்பு,பச்சை கற்பூரவம் ஆகியவற்றை வைப்பது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment