மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பெரும்பாறை அரசு உண்டு உறைவிட பள்ளியில் காலியாக உள்ள 2 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (தமிழ், தாவரவியல் , விலங்கியல்) காலிப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது.
ஆதிதிராவிடர்,பழங்குடியினர், கலை அறிவியல் பிரிவில் முதுகலைப்பட்டம், கல்வியியல் பட்டம் பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி,அதன் அருகில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்காலிக பணியிடத்தில் பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள் உரிய கல்விச்சான்றுகளுடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாக, தபால் மூலமாக அக்.3 க்குள் அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment