நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் ஆனது 2024 ஆம் ஆண்டுக்கான Engineering Executive Trainee(EET) அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை கீழே காண்போம்.
NTPC EET வேலைவாய்ப்பு:
எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில் மற்றும் மைனிங் இன்ஜினியரிங் ஆகிய பொறியியல் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர் பொறியியல்/தொழில்நுட்பத்தில் 65% மதிப்பெண்களுக்கு குறையாத முழுநேர இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் GATE 2024 இல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
NTPC EET ஆட்சேர்ப்பு 2024 இல், பொது/EWSக்கான வயது வரம்பு விண்ணப்பத்தின் கடைசி தேதியின்படி 27 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST/OBC/PWBD/XSM விண்ணப்பதாரர்களுக்கான வயது தளர்வு GOI விதிகளின்படி பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பதவிக்கு என ரூ. 40,000/- முதல் ரூ. 1,40,000/- வரை சம்பள வழங்கப்பட உள்ளது. NTPC EET அறிவிப்பு பற்றிய முழு விவரங்கள் https://careers.ntpc.co.in/ தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியகாந் பின் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Short Notification 2023 Pdf
No comments:
Post a Comment