Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 1, 2023

அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

வங்கி வேலை நாட்கள், விடுமுறை தினங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கி மூலமே நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் அக்டோபர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதனை பொறுத்து வங்கி வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்தியா முழுவதும் ஆன்லைன் பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் வங்கி வேலை நாட்கள் முன்கூட்டியே தெரிந்து வைத்துகொண்டால் அதற்கேற்ப வங்கிப்பணிகளை திட்டமிட்டுக்கொள்வது எளிதாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, குறிப்பிட்ட மாநிலத்தைப் பொறுத்து அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் சில முக்கிய விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். முக்கிய விடுமுறைகள் மாநில அரசால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியலின்படி, அடுத்த மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு மேல் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் :

அக்டோபர் 2 - திங்கட்கிழமை, மகாத்மா காந்தி ஜெயந்தி
அக்டோபர் 12 -ஞாயிறு- நரக சதுர்த்தசி
அக்டோபர் 14 - 2வது சனிக்கிழமை, மஹாலயா ( கர்நாடகா, ஒடிசா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில்)
அக்டோபர் 15 -ஞாயிறு- கதஸ்தாபனா ( மகாராஜா அக்ரசென் ஜெயந்தி (பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான்)
அக்டோபர் 18 -புதன்- கதி பிஹு (அஸ்ஸாம்)
அக்டோபர் 19-செவ்வாய் - சம்வத்சரி திருவிழா (குஜராத்)

அக்டோபர் 21 -சனிக்கிழமை- துர்கா பூஜை (மகா சப்தமி)
அக்டோபர் 22 - ஞாயிறு- மகா அஷ்டமி
அக்டோபர் 23-திங்கட்கிழமை- மகா நவமி / ஆயுத பூஜை
அக்டோபர் 24 -செவ்வாய் - தசரா/ விஜயதசமி / துர்கா பூஜை
அக்டோபர் 25-புதன் கிழமை, துர்கா பூஜை
அக்டோபர் 26 -வியாழக்கிழமை துர்கா பூஜை

அக்டோபர் 27-வெள்ளிக்கிழமை, துர்கா பூஜை
அக்டோபர் 28- 4வது சனிக்கிழமை, லட்சுமி பூஜை, பர்கத் திவாஸ்
அக்டோபர் 31 -செவ்வாய், சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்

அதே போல் வங்கி விடுமுறை நாட்களிலும் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் வங்கிப் பணிகளை முடித்துக் கொள்ளலாம். UPI, மொபைல் பேங்கிங் அல்லது இன்டர்நெட் பேங்கிங்களுக்கு இந்த விடுமுறை நாட்கள் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News