THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Wednesday, October 4, 2023

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் பலன்கள் எப்படி? (அக்.5 - 11)

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு(வ), ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன்- களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 08.10.2023 அன்று மாலை 03.40க்கு ராகு பகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08.10.2023 அன்று மாலை 03.40க்கு கேது பகவான் ரண ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: நிதானமாக செயல்படும் உங்களுக்கு இந்த வாரம் பல நன்மைகள் உண்டாகும். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். சூரியன் மூலம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும்.

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: மேஷம் ராசியினர் செவ்வாய்க்கிழமையில் நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சினை தீரும். குடும்ப குழப்பம் தீரும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்- ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 08.10.2023 அன்று மாலை 03.40க்கு ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08.10.2023 அன்று மாலை 03.40க்கு கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: திட்டமிட்டு செயல்படும் உங்களுக்கு இந்த வாரம் இன்னல்கள் அகலும். வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்கள் - ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.

தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது இனி சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதே நேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும்.

குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: ரிஷபம் ராசியினர் பெருமாளுக்கு வெண் தாமரையால் அர்ச்சனை செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்- பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 08.10.2023 அன்று மாலை 03.40க்கு ராகு பகவான் தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08.10.2023 அன்று மாலை 03.40க்கு கேது பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உழைப்பின் மூலம் உன்னத நிலை அடையும் உங்களுக்கு இந்த வாரம் திட்டமிட்டபடி அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். வீட்டில் இருந்து வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

தொழில் ஸ்தானம் மிகவும் வலுவாக காணப்படுவதால் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்களுக்கு மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்காலக் கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: மிதுனம் ராசியினர் பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்வியறிவு பெருகும்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK