Tuesday, October 3, 2023

564 அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்பலாம்: ஆட்சியா்களுக்கு அரசு அனுமதி

காலியாகவுள்ள 564 அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதிக் கடிதத்தை, 36 மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் அனுப்பியுள்ளாா்.

கடித விவரம்: தமிழகத்தில் 2020 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாகவுள்ள அலுவலக

உதவியாளா் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் கோரப்பட்டன.

அதன்படி, அனைத்து மாவட்ட வருவாய் அலகிலும் மூன்றாண்டுகளுக்கு உட்பட்டு 564 காலிப் பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

சிவகங்கையில் அதிகம்: சிவகங்கை மாவட்டத்தில் அதிகபட்சமாக 42 இடங்கள் காலியாக உள்ளன. அரியலூரில் 12, செங்கல்பட்டில் 23, சென்னையில் 5, கோவையில் 15, கடலூரில் 16, தருமபுரியில் 10, திண்டுக்கல்லில் 23, ஈரோட்டில் 24, கள்ளக்குறிச்சியில் 22, காஞ்சிபுரத்தில் 2, கன்னியாகுமரியில் 23, கரூரில் 18, கிருஷ்ணகிரியில்15, மயிலாடுதுறையில் 22, நாகையில்14, நாமக்கல்லில் 13, நீலகிரியில் 3, பெரம்பலூரில் 7, புதுக்கோட்டையில் 13, ராமநாதபுரத்தில் 16, ராணிப்பேட்டையில் 8, சேலத்தில் 14, தென்காசியில் 13, தஞ்சாவூரில் 35, தேனியில் 30, திருச்சியில் 18, திருப்பத்தூரில் 3, திருவாரூரில் 23, தூத்துக்குடியில் 3, திருநெல்வேலி, திருப்பூரில் தலா 14, திருவள்ளூரில் 13, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் தலா 12, வேலூரில் 14 என மொத்தம் 564 அலுவலக உதவியாளா் இடங்கள் காலியாக உள்ளன.

இந்தக் காலியிடங்களை தமிழ்நாடு அடிப்படைப் பணி விதிகளில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படியும், இப்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நிரப்பிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News