Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 19, 2023

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர அடிப்படையிலான செவிலியர் பணியிடங்கள் உருவாக்க நடவடிக்கை

Add This Number In Your Whatsapp Groups -6379884356
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 3,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தேர்வுஎழுதி பணியில் சேர்ந்த இவர்கள் மாதம் 18 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டங்களில் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து முதல்கட்டமாக 500 தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோல், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களை உருவாக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதற்கு ஆண்டுக்கு ரூ.250 கோடி கூடுதல் செலவாகும் என்பதால், நிதித்துறை ஒப்புதல் கோரப்பட்டது.

No comments:

Post a Comment

Popular Feed