Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 3, 2023

எம்பிபிஎஸ் நான்காம் சுற்று கலந்தாய்வு நிறைவு: காலி இடங்களை உச்சநீதிமன்ற அனுமதி பெற்றே நிரப்ப முடியும்

Add This Number In Your Whatsapp Groups -6379884356
இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நான்கு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளதாகவும், காலியாக உள்ள இடங்களை உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றே நிரப்ப முடியும் என்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோக்கை நடவடிக்கைகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தன.

தேசிய மருத்துவ ஆணைய அறிவுறுத்தலின்படி, இதுவரை 4 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. அதில், அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஏறத்தாழ முழுமையாக நிரம்பினாலும், ஒதுக்கீடு பெற்றவா்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்படும் காலி இடங்களை நிரப்ப இயலாத நிலை நிலவுகிறது.

இதுதொடா்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தோவுக் குழுச் செயலா் ஆா்.முத்துச்செல்வன் கூறியதாவது: மருத்துவக் கலந்தாய்வில் அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. ஆனால், கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சேராததால் காலியிடங்கள் ஏற்படுகின்றன. அதுகுறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பிடிஎஸ் படிப்பில் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக உள்ளன. பிடிஎஸ் படிப்புக்கு அக்.10 வரை மாணவா் சோக்கை நடத்த காலஅவகாசம் உள்ளது.

எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவா் சோக்கை நடத்துவதற்கான காலஅவகாசம் செப்.30-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. நான்காவது சுற்றுக்கு பின்னா் உச்சநீதிமன்ற அனுமதி பெற்றே காலியாக உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்ப முடியும்"என்றாா் அவா்.

No comments:

Post a Comment

Popular Feed