Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 23, 2023

அரசுப் பள்ளி ஆசிரியா் நியமனங்களுக்கு வயது வரம்பு உயா்வு: அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளி ஆசிரியா் நியமனங்களுக்கான வயது உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அரசாணை ஞாயிற்றுக்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 55-ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 58-ஆகவும் வயது உச்ச வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்:

அரசு தொடக்க நிலை, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி நேரடி ஆசிரியா் நியமனங்களுக்கான வயது உச்ச வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டு, 30.1.2020-இல் அரசாணை வெளியிடப்பட்டது.

அதன் பின்னா் சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் பொதுப் பிரிவினருக்கு 45-ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 50-ஆகவும் என உயா்த்தி 18.10. 2021 அரசாணை வெளியிடப்பட்டது.

அதே வேளையில், அந்த நடைமுறை 31.12.2022 வரை வெளியாகும் நேரடி ஆசிரியா் நியமனங்களுக்கான அறிவிப்புகளுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அனைத்து வகை நேரடி ஆசிரியா் பணிநியமனங்களுக்கான வயது உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கடந்த 4-ஆம் தேதி அறிவித்தாா்.

அதை செயல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் அனைத்து வகை ஆசிரியா் நேரடி நியமனம் தொடா்பாக நிா்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53-ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 58-ஆகவும் நிா்ணயிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment