Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 10, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.11.2023

Add This Number In Your Whatsapp Groups -6379884356

அத்திப்பூ

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :295

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

விளக்கம்:

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
பழமொழி :

Do in Rome as Romans do.

ஊரோடு ஒத்து வாழ்

இரண்டொழுக்க பண்புகள் :

1)  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
2)  துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளையில் விழித்திருப்பதோ முறையான செயல் அல்ல.

பொது அறிவு :

1. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் எது?

விடை: மூங்கில்

2. வருமான வரி என்பது

விடை: ஒரு நேர்முக வரி

English words & meanings :

 unanimous (யுனானிமஸ்)- a complete agreement ஒரே கருத்துள்ள, ஒப்புமை உடையது.unassailable(அன்அஸ்ஸைலபில்)- impossible to attack தாக்க முடியாதது

ஆரோக்ய வாழ்வு : 

அகத்தி பூ:இந்தப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால், அவர்கள் உடம்பில் உள்ள விஷம் மலத்துடன் வெளியேறும். அதுமட்டுமல்ல புகைப்பிடிப்பதில் உள்ள ஆர்வமும் குறையும். அகத்திப்பூவுடன் மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள் வரும்

நீதிக்கதை

 ஒரு குட்டி கதை..

கடவுள் வந்தார்...!

"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் :

“எனக்கு கணக்கிலடங்கா காசும்,

பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்:

“நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் :

“உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி:

“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..!

உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி..

இன்னும் ஐந்து பேரும்

தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்:

“உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும்

அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

*"மனநிம்மதி, மன நிறைவு..."*

நாங்களும் அதுக்கு தானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :

“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!

நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,

பத்தாவது மனிதனைப் பார்த்து :

"நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..சிறிது நேரம் கழித்து வருகிறேன்..”

என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது,அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!

கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..!

துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!

நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!

தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..!

அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..!

மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!

கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம்

*பத்தாவது* மனிதனா..?

இல்லை

*பத்தாது* என்கிற மனிதனா..?

முடிவு எடுங்கள்..

*எண்ணும் எண்ணங்களே..* 

*உங்களைத் தீர்மானிக்கும்..!!*

*இனிமையான எண்ணங்களுடன் இவ்வுலகில் மகிழ்ச்சியுற்று வாழ பேராசை என்பதை ஒழித்து மனநிம்மதி என்ற விலைமதிப்பற்ற செல்வம் பெற முயலுங்கள்


இன்றைய செய்திகள்

10.11.2023

*பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடக்கம்.

*டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர்; ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

* பாராளுமன்றத்திற்கு ஏப்ரலில் தேர்தல்; தமிழகத்தில் ஓட்டுப்பதிவை ஒரே கட்டமாக நடத்த முடிவு. 

*டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழைக்கு திட்டம்.

*டபிள்யூபிஎல் 2024  ஏல தேதியை அறிவித்தது பிசிசிஐ.

Today's Headlines

*Winter Session of Parliament begins on 4th December.

 * US Defense Secretary arrives in Delhi;  Welcomed by Rajnath Singh.

 * Elections to Parliament in April;  It has been decided to conduct the polling in Tamil Nadu in a single phase.

 * Plan for artificial rain to reduce air pollution in Delhi.

 *BCCI announced WBL 2024 auction date.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed