Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 27, 2023

133 முதுநிலை மருத்துவ இடங்கள்; மாணவர் சேர்க்கை துவக்கம்

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 1.71 கோடி ரூபாய் செலவில், பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்புகளை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

அந்த வகையில், நவீன சமையலறை மற்றும் தினந்தோறும் வண்ண படுக்கை விரிப்புகள் மாற்றம், மொபைல் போன் சார்ஜ் செய்வதற்கு மின்னேற்ற நிலையம், பல்வேறு நோய்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்த கையேடுகள் ஆகியவற்றை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, 100 சதவீத இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல் உயர் சிறப்பு மருத்துவ படிப்பை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 407 இடங்களில், 204 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

மேலும், முதுநிலை மருத்துவ படிப்புகளில் காலியாக இருந்த, 133 இடங்கள் நிரப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு கடிதம் எழுதியிருந்தேன். அதன் பயனாக, அந்த இடங்களை நிரப்பிக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைதொடர்ந்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment