Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 2, 2023

+2 Public Exam 2024 - NR Downloading & Corrections - instructions

மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலினை ( Nominal Roll ) அடிப்படையாகக் கொண்டு , நடைபெறவுள்ள 2023-2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது.

எனவே , இது குறித்தான பின்வரும் அறிவுரைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களும் 03.11.2023 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று , தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள தங்களது பள்ளி மாணவர்களின் நிரந்தரப் பதிவெண் , பெயர் , பிறந்த தேதி , பாடத்தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் .

NR Downloading & Corrections - instructions - Download here

No comments:

Post a Comment