மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான சிடெட் தேர்வு ஜனவரி 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் ctet.nic.in/ என்ற இணையதளம் மூலமாக நவம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment