Join THAMIZHKADAL WhatsApp Groups
வேளாண் துறையில் காலியாகவுள்ள 263 உதவி வேளாண் அலுவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அரசுப் பணியாளா் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சனிக்கிழமை வெளியிட்டது.
உதவி வேளாண் அலுவலா், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் என மொத்தம் 263 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வாணைய இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப டிச.24 கடைசி நாளாகும்.
இணையவழியில் விண்ணப்பத்தை திருத்தம் செய்ய டிச.29 முதல் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும். இதற்கான தேர்வு கணினிவழியே அடுத்த ஆண்டு பிப்.7-ஆம் தேதிவரை நடத்தப்படும். தேர்வு அறிவிக்கை, விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பாா்த்துத் தெரிந்து கொள்ளலாம் என அரசுப் பணியாளா் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment