தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பதவிகளுக்கான எழுத்து தேர்வு (கணினி வழித் தேர்வு) வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வௌியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில், ஆராய்ச்சி உதவியாளர், மேலாளர் (கால்நடை), தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பதவிகளுக்கான எழுத்து தேர்வு (கணினி வழித் தேர்வு) வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.
No comments:
Post a Comment