Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 15, 2023

காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக வலுப்பெற்றது

Add This Number In Your Whatsapp Groups -6379884356 வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இது மேற்கு, வடமேற்கில் நகர்ந்து, மத்திய மேற்கு கடற்பகுதியில் நிலவும். உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இ ன்று (நவ., 15) மண்டலமாக வலுப்பெற்றது. ஆந்திர கடலோரத்தை ஒட்டி நகர்ந்து சென்று ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது என சென்னை வானிலை மையம் கூறியிருந்தது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மழை பெய்யலாம்.

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் ஒரே நாளில் 39 ஏரிகள் நிரம்பின. இந்த மாவட்டங்களில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.நீர் வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 24 அடி உயரமுள்ள இந்த ஏரிக்கு காலை 6 மணி நிலவரப்படி 22.04 அடியாக நீர்மட்டம் இருந்தது. ஏரிக்கு 301 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில் 162 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரிக்கும் நீர் வரத்து 606 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் 2,745 மில்லியன் கன அடி நீர் உள்ளது.கடல் சீற்றம் மாமல்லபுரத்தில் 2வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், உயாளிகுப்பம், கோகிலமேடு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.சென்னை, காசிமேடு துறைமுக வார்ப்பு பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக ராட்சத அலைகள் பல அடி உயரம் வரை எழுகின்றன. இதனால் பொழுது போக்க, வேடிக்கை பார்க்கவோ வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.சென்னையில் கொட்டி தீர்த்த கனமழைசென்னையில் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து மழை பெய்தது. சோழிங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

No comments:

Post a Comment

Popular Feed