Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 23, 2023

துாறலுக்கே லீவு கேட்பதா கலெக்டர் அதிருப்தி!!!

துாறலுக்கே லீவு கேட்பதா தஞ்சை கலெக்டர் அதிருப்தி...


''சின்ன துாறல் விழுந்தாலே பெற்றோர் பள்ளிக்கு லீவு எதிர்பார்க்கின்றனர். மழையில் நனைந்தபடியே பள்ளி சென்றதால் தான் உங்கள் முன் நான் கலெக்டராக நிற்கிறேன்'' என தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கமங்கலம் கிராமத்தில் நேற்று மக்கள் நேர்காணல் முகாமில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

மழை தொடர்பான எச்சரிக்கை வந்து விட்டாலோ சின்ன துாறல் வந்து விட்டாலோ காலையிலேயே பல பெற்றோர் எனக்கு போன் செய்து 'பள்ளிக்கு லீவு உண்டா?' என கேட்கின்றனர்.

மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்.நான் கேரளாவை சேர்ந்தவன். அங்கு ஜூன் 1 முதல் மழை துவங்கி விடும். பல நேரங்களில் மழையில் நனைந்தபடி பள்ளி சென்றுள்ளேன். மழைக்கு விடுமுறை என்று நினைத்து நான் வீட்டில் இருந்திருந்தால் உங்கள் முன் கலெக்டராக நின்றிருருக்க மாட்டேன். தயவு செய்து பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். வாழ்க்கையில் கல்வி மட்டும் தான் மற்றவர்களால் திருட முடியாத சொத்து. எந்த கஷ்டமானாலும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment