Monday, February 26, 2024

15 நாளில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ இதை செய்ங்க!

15 நாளில் உடல் எடையை குறைக்க முடியும். ஆண், பெண் இருவருமே இதை பின்பற்றி உடல் எடையை குறைக்கலாம்.

பொதுவாக உடல் உடை அதிகரிக்க நொறுக்குத்தீனி அதிகம் எடுத்துக்கொண்டு, ஆரோக்கியமான உணவு உட்கொள்ளாமல் இருப்பதும், போதிய உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பதும் காரணமாக உள்ளது.

பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

கருப்பை நீர்க்கட்டி, கருப்பையில் பிரச்னைகளின்போதும், பெண்களுக்கு உடலில் எடை அதிகரிக்கும். இந்நிலையில் உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதற்கு, உடல் எடையை குறைக்க உதவும் டிப்ஸ். இது கருப்பை பிரச்னைகளையும் தீர்க்கக்கூடியதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

மல்லி விதை - ஒரு கப்

கருஞ்சீரகம் - ஒரு கப்

மல்லி விதை தைராய்ட்டு பிரச்னைக்கு சிறந்த தீர்வைக் கொடுக்கும். அனைத்து வகை தைராய்ட்டு பிரச்னைகளால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை சரிசெய்யும். தொடர்ந்து வர மல்லியை உணவில் சேர்த்துக்கொண்டு வரும்போது ஹைப்பர் தைராய்ட், ஹைப்போ தைராய்ட் இரண்டும் குணடாகும். செரிமான மண்டலத்து வலு சேர்க்கும். இடுப்பு வலியை சரிசெய்யும். மூட்டுவலியை சரிசெய்யும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க மல்லிவிதை பயனுள்ளதாக இருக்கும்.

இதில் உள்ள கருஞ்சீரகம் சகல நோய்களுக்கும் நல்ல தீர்வு கொடுக்கும். மரணத்தைக்கூட விரட்டியடிக்கும் தன்மை கருஞ்சீரகத்துக்கு உண்டு. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். உடலில் உள்ள கெட்ட நீர், கெட்ட கொழுப்பு, கெட்ட நீரை அடித்து விரக்கூடிய தன்மை கருஞ்சீரகத்துக்கு உண்டு. சிறுநீர் பையில் உள்ள அடைப்பை நீக்கும்.

இரண்டையும் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஆறவைத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் இதில் கால் ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்தால், உங்களுக்கு சிறந்த நிவாரணம் கொடுக்கும். பின்புற சதை, தொப்பை போன்றவற்றை கரைக்கும் தன்மை கொண்டது.

சுக்குப்பொடி கால் சேர்த்து மூன்றையும் ஒன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் பொடி சேர்த்து அது முக்கால் டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து, அது வற்றியவுடன், வடிகட்டி, இதில் தேவைப்பட்டால் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து பருகலாம்.

இதை காலை வெறும் வயிற்றில் கட்டாயம் பருகவேண்டும். காலை, மாலை இருவேளையும் டீ, காஃபிக்கு பதில் பருக வேண்டும். இரவு படுக்கச்செல்லும் முன்னும் உறங்கலாம்.

வறுத்து பயன்படுத்துவதால், சுவை மற்றும் மணம் நிறைந்ததாக இருக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை முழுமையாக கரைக்கும். தொடரந்து ஒரு 15 நாள் இரண்டு வேளையும் பருகிவர நல்ல பலன் தரும். உடலில் உள்ள கெட்ட நீர், கெட்ட கொழுப்பு இரண்டையும் வெளியேற்றிவிடும். பிபி, சுகர் என எது இருந்தாலும் சாப்பிடலாம்.

ஆண்கள், பெண்கள் என அனைவரும் சாப்பிடலாம். செரிமான மண்டலத்தை சீராக்கும். வயிறு உப்புசத்தை சரிசெய்யும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும். சிலருக்கு உடல் வலி, உடல் சோர்வு நீங்கும். கருப்பையில் உள்ள நீர்க்கட்டியை கரைக்கக்கூடிய தன்மை இதில் உள்ளது. அனைத்து வித தைராய்ட், ஹார்மோன் சமமின்மை என எதையும் சரிசெய்யும்.

இத்துடன் நீங்கள் உடற்பயிற்சியும் செய்துவர உடல் எடை ஆரோக்கியமான முறையில் குறையும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News