Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 28, 2024

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க . நடுநிலை . உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடி கல்வி . எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் பிற முன்னெடுப்புகளான தற்காப்பு கலைப் பயிற்சி , கல்வி சுற்றுலா . கல்வி சாரா இணை செயல்பாடுகளான இலக்கிய மன்றம் , வினாடி வினா போட்டிகள் , கலைத் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன . எனவே , மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர்.

ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமையாகும் . அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள் , நடுநிலைப் பள்ளிகள் , உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்2024-25 ஆம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு 01.03.2024 முதல் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றிட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி தெரிவிக்கப்படுகிறது . அலுவலர்களுக்கும்


2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்!

Students Admission 2024 - 2025 | DSE & DEE Proceedings - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News