Thursday, March 7, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.03.2024

இரத்த செல்கள்




திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்

குறள்:372

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

விளக்கம்:

தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.



பழமொழி :

One step forward : Two steps back

சண் ஏற முழம் சறுக்குகிறது

இரண்டொழுக்க பண்புகள் :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...

2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை.

பொன்மொழி :

நீ செய்த தவறுகளை
வாழ்வில் எப்போதும்
மறந்து விடாதே..
அவை தான் உனக்கு
வழிகாட்டும் வழிகாட்டி.

பொது அறிவு : 

1. இரத்தத்தின் pH மதிப்பு

விடை: 7.4

2. கண்ணாடியை கரைக்கும் அமிலம்?

விடை: ஹைட்ரோபுளூரிக் அமிலம்

English words & meanings :


Practical -       செய்முறை
Preparation - தயாரித்தல்
Clearly -   தெளிவாக
Accuracy-துல்லியமாக
Reactions - எதிர்வினை

ஆரோக்ய வாழ்வு : 

புதினா கீரை : மூச்சுத்திணறல் உடனே நிற்க வேண்டுமானால், புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து இந்த ஊறல் குடிநீரைக் குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

நீதிக்கதை

 வேரும், இலையும்


ஓர் ஊரில் ஒரு குடும்பம் வளப்பமாக வாழ்ந்து கொண்டிருந்தது. குழந்தைகள் தந்தையின் பேச்சை தட்டாமல் மரியாதையுடன் கேட்டார்கள். ஒரு சமயம் அந்தத் தந்தை தனது இரு புதல்வர்களின் புத்திசாலித்தனத்தை சோதித்துப் பார்க்க விரும்பினார். என்ன செய்வது என்று சிந்தித்து, ஆளுக்கு ஒரு சிறிய மாமரச் செடியைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார். விரைவில் இனிப்பான பழங்களை அதிகமாகத் தருகிற மரத்தை வளர்க்கும் சிறுவனுக்கு பரிசு தருவதாகவும் அறிவித்தார்.

முட்டாளாகிய சிறுவன் தான் வளர்த்து வந்த செடி பெரிதாகி, மரத்தின் இலைகள் யாவும் உதிர்வதைக் கண்டான். சிறிது காலத்தில் கிளையின் நுனியில் பூக்கள் பூப்பதையும் அவன் கண்டான். ஒவ்வொரு இலையின் மீதும் தண்ணீர் ஊற்றினான். என்ன ஆயிற்று? கிளைகளில் இருந்த இலைகள் மேலும் அதிகமாக உதிர்ந்தன. வளர்ந்து நீண்டு நின்ற மரமும் சீக்கிரமே பட்டுப்போயிற்று. ஆனால் அறிவுள்ள சிறுவன் என்ன செய்தான் தெரியுமா? இதற்கு மாறாக மரத்தின் வேருக்குத் தண்ணீர் ஊற்றினான். மரம் கிடு கிடுவென்று பசுமையாக செழித்து வளர்ந்தது. குறுகிய காலத்திலேயே இனிப்பான பழங்களை நிறையத் தந்தது.

அதுபோல மனிதனின் அறிவு வளர்ச்சியை பரிசோதிக்க கடவுள் மனிதப் பிறவியை நமக்குக் கொடுத்திருக்கிறார். முட்டாள் மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? நிலையான அமைதியும் அமரத்துவமும் பெற விரும்புகிறார்கள். குறுக்கு வழியில் போகிறார்கள். அதற்காக புலன்களின் விருப்பத்தை நிறைவேற்றவும், உலகியல் ஞானம் பெறவும் முயற்சிக் கிறார்கள். அதுதான் சரியான வழி எனவும் நினைக்கிறார்கள்இது தவறு. பகுத்தறிவில்லாத அவர்கள் வீணே பரிதாபமாக இறக்கிறார்கள். இதற்கு மாறாக அறிவுடையவன் என்ன செய்கிறான்? அனைத்து படைப்புகளுக்கும் மூலமாக இருக்கும் இறைவனை நினைந்து தியானம் செய்கிறான். அவன் மனம் ஒருநிலைப்படுகிறது. இதன் மூலம் உலகில் அனைத்துச் செல்வமும், ஞானமும் அவனுக்கு கிடைக்கிறது. இறைவன் நிலையான பேரானந்தத்தையும் அளிக்கிறார். அதனால் நாமும் இறைவனை நம்பி நம் முழு மனதையும் சில நேரங்களுக்கு அவருக்காக அரப்பணிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

07.03.2024

*மேற்கு வங்கம், ஹூக்ளி நதிக்கடியில் மெட்ரோ ரயில் சேவை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

*ஏப்ரல் மின் தேவையை சமாளிக்க மின்வாரியம் ஏற்பாடு.

*32 வகையான உடல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகள் -ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

*ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் முதன்முறையாக தகுதி பெற்று புதிய வரலாறு படைத்தன.

*பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசி சாதனை படைத்தார் தென்னாப்பிரிக்க வீராங்கனை.

Today's Headlines

*Prime Minister Modi inaugurated the metro train service under Hooghly river in West Bengal.

 *Electricity Board makes proper arrangements to meet electricity demand in April.

 *Ultra-Processed Foods Lead to 32 Types of Physical Disorders -Shocking  Information from a study of foods.

 *Indian men's and women's teams qualified for the Olympic table tennis inter-team competition for the first time and created a new history.

 * The South African player set a record by bowling the fastest ball in women's cricket.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News