Monday, March 11, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2024

நார்வே




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்

குறள்:373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

விளக்கம்:

கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.



பழமொழி :

Penny wise,pound foolish

கடுகு போன இடம் ஆராய்வார்; பூசணிக்காய் போன இடம் தெரியாது

இரண்டொழுக்க பண்புகள் :

 1. கல்வியும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.

 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி :

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.”___ இறையன்பு இஆப.

பொது அறிவு : 

1. மூன்று இதயங்களை கொண்ட உயிரினம் எது? 

ஆக்டோபஸ். 

2. உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு எது? 

நார்வே.

English words & meanings :

 Hit the books - to study very hard, கடினமாக படித்தல் 

hit the nail - says exactly or correctly, மிக சரியாக கூறுவது

ஆரோக்ய வாழ்வு : 

குப்பை மேனி கீரை :குப்பைமேனி பூச்சிகளினால் ஏற்படும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி, தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்தும்.

மார்ச் 11


நீதிக்கதை

 கொடுப்பதில்தான் சந்தோஷம்


ஒருவர் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குச் சென்றார். வீட்டிற்காக சில பொருள்களை வாங்க வேண்டுமென்று வந்தார். அவர் ஒரு கடையில், ஒரு பொருளை வாங்குவதற்காக, பணப்பையை எடுக்க நினைத்த போது, பணப்பையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தும் பணப்பை கிடைக்கவில்லை. ஆகையால் எதுவும் வாங்காமலே வீட்டிற்குத் திரும்பினார். அவருடைய வீட்டில் உள்ளவர்கள் அவரைக் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.

பணத்தை இழந்த வருத்தம் அவருக்கு இருந்தது. வெகுநேரம் அதைப்பற்றியே நினைத்து வருந்திக்கொண்டிருந்தார். நாளடைவில் அந் நிகழ்ச்சியை அவர் மறந்து போனார். ஆனாலும்

வெளியில் செல்லும் போது, எடுத்துக் கொண்டு

போகும் பணத்தில் கவனமாக இருக்கலானார்.

மற்றொருநாள் நூறு ரூபாயை பையில் வைத்துக்

கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றார்.

வீட்டிற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள்

வாங்கினார். ஐம்பது ரூபாய் மீதம் இருந்தது.

குழந்தைகளுக்காக இனிப்பு வகை ஏதாவது

வாங்கலாம் என்று எண்ணினார். இனிப்பகத்தை

நோக்கிச் செல்லும்போது ஒரு பெண்மணி கையில்

பிள்ளையைப் பிடித்தபடி வந்தாள்.

"ஐயா, என் ஒரே மகன் இவன். பள்ளியில் படிக்கிறான். புத்தகம் வாங்க வேண்டும். கையிலோ காசில்லை. நீங்கள் கொடுத்து உதவினால் புண்ணியம் உண்டு” என்று கெஞ்சினாள்.

படிக்கும் பிள்ளைக்கு புத்தகம் வாங்கப் பணம் கொடுப்பது நல்ல செயல்தானே என்று எண்ணியவர் தம்மிடம் இருந்த ஐம்பது ரூபாயை அந்தப் பெண்மணிக்கு அளித்து விட்டார். வீடு நோக்கி வந்து கொண்டிருந்த அவருடைய மனத்தில் சந்தோஷம் பொங்கியது. தம்மால் ஒருவருக்கு உதவி செய்ய முடிந்ததே என்ற சந்தோஷம்.

வீட்டிற்கு வந்ததும். தம்முடைய சந்தோஷத்தை வீட்டில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

பணப்பை தொலைந்து போன போது இழந்ததும் ஐம்பது ரூபாய்தான். இப்போது கொடுத்ததும் ஐம்பது ரூபாய்தான். ஆனால் தொலைந்து போன போது இழந்த வருத்தம், இப்போது இல்லை.

"எதுவும் தாமாகவே சென்று விட்டால் அதனால் துன்பமே ஏற்படுகிறது. நாமே அறிந்து அதனைக் கொடுக்கும் பொழுதோ அதனால் சந்தோஷமே ஏற்படுகிறது."

என்ற நீதியை புரிந்துகொண்டார்.

இன்றைய செய்திகள்

11.03.2024

*புதிய இந்திய தேர்தல் ஆணையர் குறித்து மார்ச் 15-ல் ஆலோசனை.

*ஜி பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க சிறப்பு குழுக்கள்; வருமான வரித்துறை.

*வருகிற செவ்வாய்க்கிழமை முதல் சென்னையில் இருந்து தினமும் பெங்களூரு புறப்படும்- 2வது வந்தே பாரத் ரயில்.

*பிரெஞ்ச் ஓபன் பேட்மிட்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக்- சிராக் ஜோடி.

*ஐபிஎல் 2024 தொடர் கொல்கத்தா அணியில் ஜேசன் ராய்க்கு பதிலாக இங்கிலாந்து அதிரடி வீரர் சேர்ப்பு.

Today's Headlines : 

 *Consultation regarding new Election Commissioner of India will be held on March 15.

 *Special committees to prevent payments to voters through GPay, Phone Pay;  Income Tax Department.

 *From next Tuesday, 2nd Vande Bharat train will depart from Chennai to Bengaluru daily.

 *French Open Badminton: India's star pairing of Sathvik-Chirag advanced to the finals.

 *England action player to replace Jason Roy in IPL 2024 Kolkata team.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News