Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 20, 2024

2049 காலிப்பணியிடங்கள். 10, 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்..

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மத்திய அரசில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வாணையம் 12ம் கட்ட தேர்தெடுக்கப்பட்ட (Phase-XII/2024) பதவிகளை நிரப்ப உள்ளது.

அதன்படி, மத்திய அரசு வேலையில் 2,049 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 27ம் தேதியாகும்.

காலிபணியிட விவரங்கள்:

ஆய்வக உதவியாளர், பெண் மருத்துவ உதவியாளர், மருத்துவ உதவியாளர், நர்சிங் அதிகாரி, மருந்தாளுனர், களப்பணியாளர், துணை ரேஞ்சர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், கணக்காளர், உதவி தாவர பாதுகாப்பு அலுவலர் போன்ற இடங்களில் மொத்தம் 2049 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பதவி வாரியாக 10, 12ம் வகுப்பு மற்றும் டிகிரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மேலும் ஒரு சில பதவிகளுக்கு அந்த பதவியை பொறுத்து கூடுதல் தகுதி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம்:

குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயது வரை இருக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ. 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் SC, ST, PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. BHIM UPI, நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் விசா, மாஸ்டர் கார்டு, மேஸ்ட்ரோ, ரூபே கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் https://ssc.nic.in/Portal/Apply என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26-03-2024.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 27-03-2024.

ஆன்லைன் கட்டணம் உட்பட விண்ணப்பப் படிவத்தை சரிசெய்வதற்கான சாளர தேதிகள்: 30-03-2024 முதல் 01-04-2024 ஆகும். மேலும், கணினி அடிப்படையிலான தேர்வு தேதி: மே 6 முதல் 8 ஆகும். ஆனால் இது தற்காலிகமானது. மேலும் இந்த காலிப்பணியிடங்கள் மற்றும் சம்பளம் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள இதனை https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Phase-XII_Notification_2024_26022024.pdf க்ளிக் செய்யவும்.

No comments:

Post a Comment