வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மற்றும் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் குறித்து தினசரி தகவல் தெரிவிக்குமாறு வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இது அமலில் இருக்கும் என்பதால், கண்காணிப்புக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வங்கிகள் தயாராகி வருகின்றன.
இதுகுறித்து வங்கி வாரியக் கூட்டங்களில் விவாதித்து, ஊழியர்களின் சிறப்புக் குழுக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ள வங்கிகள், சந்தேகப்படும்படியான பணப் பரிவர்த்தனைகள் குறித்து தினமும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளன.
No comments:
Post a Comment