Sunday, March 17, 2024

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்.. படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்..!

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் 18 வயது பூர்த்தி ஆனவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்திருந்த நிலையில் அதற்கான கால அவகாசம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரை சேர்க்க இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் இன்று பெயர் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பயன்படுத்தி இன்று மாலைக்குள் விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்

எனவே வாக்காளர் பட்டியல் பெயர் இல்லாத 18 வயது பூர்த்தி செய்த இளைஞர்கள் தங்களது வாக்குரிமை நிலை நாட்ட உடனே படிவம் 6-ஐ பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News