Monday, March 18, 2024

வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம்.!! தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.!!

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து 2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுகிறது.

இந்த பொது தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது .

18-வது பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதலாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 13-ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து மே மாதம் 20 ஆம் தேதி ஐந்தாம் கட்டவாக்கு பதிவும் 25ஆம் தேதி ஆறாம் கட்டவாக்கு பதிவும் நடைபெறுகிறது. ஜூன் மாதம் ஒன்றாம் தேதி இறுதி மற்றும் 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த காலகட்டத்தில் தான் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா போன்ற மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. அனைத்து தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. இரண்டு மாநிலங்களின் பதவிக்காலம் ஜூன் இரண்டாம் தேதியோடு முடிவடைய இருப்பதால் 4-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த வாக்கிய எண்ணிக்கை ஜூன் 2-ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News