Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 5, 2024

தினமும் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால்...



பொதுவா நோய் காரணமாகவோ, அல்லது நாம் சாதாரணமாக கீழே விழுந்து அடிப்பட்ட காயங்களினாலோ ஏற்படும் வீக்கங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அதுவே பின்னாளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.இது போன்ற பின் விளைவுகள் ஏற்படாமல் தடுக்கவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உதவுகிறது.

அதாவது இதில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட் ரத்தத்தில் இருக்கிற ஃப்ரீ ரேடிக்கல்கள் மூலக்கூறுகளை கட்டுப்படுத்தி வீக்கங்களில் நோய் பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.

நமது உடலுக்கு பல விதமான நன்மைகளைத் தருகிறது இந்த வைட்டமின் டி. நோய் எதிர்ப்பு மண்டலத்தை, மேலும் வலுவாக்கவும் செய்கிறது. உடலில், எலும்புகள் மற்றும் பற்களின் இயல்பான வளர்ச்சிக்கு, உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருக்க வேண்டியது அவசியம்.
உண்மையில் உடலுக்குப் போதுமான வைட்டமின் டி கிடைக்கவில்லை என்றால் எலும்புகள் மென்மையாகி உடையவும் கூடும். அந்த வகையில் நமது உடலுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்க, இந்த மீன் எண்ணெய் மாத்திரை மூலமாகவும் பெற முடியும்.

அதே போன்று இந்த வைட்டமின் டி மாதவிடாய் நிற்கும் காலத்தில் எலும்பு புரை நோய்க்கான ஆபத்தையும், குறைக்கச் செய்கிறது. அதனால் பெண்களுக்கு வைட்டமின் டி அவசியம் என பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் இது மூட்டுகளை வலுவடைய செய்வதால் மூட்டு வலிகளை, குறைக்கவும் செய்கிறது.

மூளையில் செரட்டோனின் அளவு குறைவாக இருப்பதாலேயே மன அழுத்தங்கள் உருவாகின்றன. இதனை, மீன் எண்ணெய் மாத்திரை சரி செய்கிறது. மீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் டி சத்து மூளையில் செரட்டோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்கிறது.

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மீன் எண்ணெய் மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் பார்வை குறைபாடு நீங்கும். மேலும், நரம்புகளின் அழுத்தங்களால் ஏற்படும் கண் அழுத்த நோயையும் தொடர்ந்து மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் குணப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment