அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் - DSE செயல்முறைகள்!
அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெறும் ஆசிரியர்களை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது . அதன்படி அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கத்தில் எதிர்வரும் 06.03.2024 அன்று நடைபெற உள்ளது.
எனவே தங்கள் மாவட்டத்தில் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஊக்கத் தொகை தலா ரூ .10 இலட்சம் மற்றும் அப்பள்ளி தலைமையாசிரிருக்கு பாராட்டுச் சான்றிதழும் , கேடயமும் வழங்கப்படவுள்ளது. அவ்வாறு தெளிவு செய்யப்பட்ட இணைப்பில் கண்ட பள்ளித் தலைமையாசிரியர் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவர் என நான்கு நபர்கள் என மேற்கண்ட கலையரங்கத்திற்கு காலை 08.00 மணியளவில் வருகை தா நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் , கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் விருது வழங்கும் விழாவிற்கு வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு போக்குவரத்து / தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றினை அவரவர்களே தனது செந்த செலவில் செய்து கொள்ள தெரிவிக்குமாறு சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு – விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட பள்ளி / தலைமையாசிரியர்களின் பட்டியல்...👇
No comments:
Post a Comment