உயர் தொழில் நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை மாணவர்களுக்கு வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6.
ந.க.எண்.76896/பிடி1/53/2017, நாள் 15.02.2024
பொருள்: பள்ளிக்கல்வி - உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Labs) - உயர்தொழில் நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை வழங்குதல் - மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது - சார்பு
பார்வை : சென்னை-6, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்.4648/A4/Student Report Card/ SS/2023, நாள்.29.01.2024
பார்வையில் காணும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரின் கடிதத்தின்படி, உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் செயல்படும் (HI-TECH LABS) அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்தொழில் நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை வழங்குவது சார்ந்து நிதி ஒதுக்கீடு, மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட கடித நகல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதனை உரிய பள்ளிகளுக்கு அனுப்பி இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறை வழிகாட்டுதல்களின்படி செயல்பட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment