Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 17, 2024

நீர் பாதுகாப்பு குறித்த புதிய சர்வதேச முதுநிலை பட்டப்படிப்பு - சென்னை ஐஐடி அறிமுகம்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், ஜெர்மனைச் சேர்ந்த இரண்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நீர்ப் பாதுகாப்பு குறித்த புதிய கூட்டு முதுகலைப் படிப்பை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், ஜெர்மனைச் சேர்ந்த RWTH Aachen (RWTH), TU Dresden (TUD) ஆகிய இரு பல்கலைக்கழகங்களுடன் இணைந்தும், AIT, Bangkok, and UNU-FLORES ஆகியவற்றின் கூட்டு முயற்சியோடும் ‘நீர்ப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய மாற்றம் குறித்த புதிய கூட்டு முதுகலைப் படிப்பை (Joint Mater’s Program –JMP) தொடங்கியுள்ளது.

இந்த பாடத்திட்டம் மூன்று பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் படிப்புகளை கவனிக்கும். மாணவர்கள் சென்னை ஐஐடி-ல் கல்வியாண்டைத் தொடங்குவார்கள். TUD, RWTH பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டரைத் தொடர்வார்கள். தாங்கள் விரும்பும் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வறிக்கையை நெகிழ்வுத்தன்மையுடன் தயாரிக்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 2024 ஏப்ரல் 30 கடைசி நாளாகும். முதல் தொகுதிக்கான வகுப்புகள் 2024 ஜூலை 29 முதல் தொடங்கும். ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். https://abcd-centre.org/master-program/

இந்த பாடத்திட்டம் குறித்துப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “நீடித்த வளர்ச்சி இலக்குகளின் குறிக்கோள்களையும் மைல்கற்களையும் எட்டவிருப்பதால், மனிதத் திறனை வளர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்போது எந்தவொரு நாட்டிற்காகவும் மட்டுமின்றி உலகளவில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டும் நோக்கிலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment