Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 10, 2024

மேஷம் ராசிக்கு சித்திரை மாதம் எப்படி இருக்கு?

மேஷ ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதம் நிலவும் கிரகங்களின் நிலையை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது, பெரும்பாலான கிரகங்கள் உங்கள் ராசி, , ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானம் மற்றும் 11 வது வீடான லாப ஸ்தானம் ஆகிய மூன்று ராசிகளில் சஞ்சரிக்கின்றன.

இந்த அமைப்பு, நல்ல வளர்ச்சி, லாபம், முன்னேற்றம், பொருளாதார ரீதியான மேம்பாடு திருப்தி உள்ளிட்டவற்றை கொடுக்கும். அதே நேரத்தில் சுபச் செலவுகளும் அதிகரிக்கும். சித்திரை மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்வில் புதிய பாதைகள் உருவாகும்.

மேஷம் ராசிக்கு சித்திரை மாதம் 2024 சாதகமான விஷயங்கள்

லாப ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால், தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடமைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சின்ன சின்ன தடைகள் வந்து சேரும் இருப்பினும், ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு மேல் அதாவது சித்திரை மாதம் பிறந்த சில நாட்களிலேயே இந்த நிலை மாறி புதிய முயற்சிகள் அனைத்துமே வெற்றி பெற துவங்கும்.தற்காலிகமான வேலை, ஒப்பந்த வேலை உள்ளிட்ட வேலைகளில் இருப்பவர்களுக்கு நிரந்தர பணியாணை கிடைக்கும்.

ஏப்ரல் 22ஆம் தேதி, செவ்வாயின் பெயர்ச்சிக்கு பிறகு, தொழிலில் இருந்த முடக்கம் நீங்கி திடீரென்று தெரிய வளர்ச்சி ஏற்படும். செல்வாக்கு மிக்க நபர்களின் அறிமுகம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

சுக்கிரன் அடுத்தடுத்த மாங்களில் சாதகமாக செல்ல இருப்பதால், திருமணம் கைகூடும் யோகம் அமைகிறது. சித்திரை மாதம் இரண்டாம் வாரத்தில் அதாவது ஏப்ரல் மாதம் கடைசி பத்து நாட்களில் குடும்பத்தில் நல்ல செய்திகள் கேட்கும், செல்வநிலை மேம்படும், சொத்துக்களில் இருந்து வந்த தகராறு தீர்ந்து பாகப்பிரிவினைகள் இருந்தால் சமூகமாக முடியும்.

மேஷம் ராசியினர் சித்திரை மாதம் 2024 கவனமாக இருக்க வேண்டியவை
சுப விரயங்கள் நடக்கும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். தேவையில்லாத விரயங்களை கட்டுப்படுத்த அதை சுப விரயங்களாக மாற்றுவது நல்லது.

அலுவலக வேலையில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு,ஊதிய உயர்வு கிடைத்தால் கூட மறைமுக எதிரிகள் அதிகரிப்பார்கள். எனவே யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.

மேஷ ராசியில் சூரியன் உச்சமடைந்து சித்திரை மாதம் முழுவதும் சஞ்சரிப்பார். இது பலவிதங்களில் நன்மை அளித்தால் கூட, பேச்சில் கடுமை மற்றும் அதிகாரத் துணையை ஏற்படுத்தும். இது குடும்பம் முதல் அலுவலகம் வரை எல்லா இடங்களிலுமே உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே பேச்சில் கோபத்தையும் வேகத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புதியவர்களை நம்பி எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் அல்லது புதிய முயற்சிகளை துவங்க வேண்டாம்.

மேஷ ராசிக்கு 2024 குரு பெயர்ச்சி மிகுந்த யோகமான பெயர்ச்சியாக அமைய இருக்கிறது.

சித்திரை மாதம் மேஷ ராசியினர் நவக்கிரகங்களில் குரு பகவான் வழிபாடும்,

தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான வண்ணம்: பச்சை

No comments:

Post a Comment