Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 19, 2024

10, பிளஸ் 1 பொது தேர்வு விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதிய 10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற நாளைக்குள் (மே 20) விண்ணப்பிக்க வேண்டுமென தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் 10, பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் திருப்தியில்லாதவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (மே 20) நிறைவு பெறுகிறது.

இதையடுத்து விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். எனினும், விடைத்தாள் நகல் கோருபவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. விடைத்தாள் நகல் பெற்றதும் அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாள் நகல் பெற அனைத்து பாடங்களுக்கு ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உயிரியல் பாடத்துக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News