Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 28, 2024

தமிழ்நாடு அரசு துறைகள் காலியாகவுள்ள 118 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு துறைகளில் உள்ள 118 காலிப்பணியிடங்களை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்பணியிடங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி மற்றும் காலிபணியிடங்கள் விவரம்:

பதவி: கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர்- அரசு சட்டக் கல்லூரிகள். காலியிடங்கள்: 12

மேலாளர் தரம்-III(சட்டம்). காலியிடங்கள்: 2

முதுநிலை மேலாளர் (சட்டம்). காலியிடங்கள்: 9

உதவி மேலாளர்(சட்டம்). காலியிடங்கள்: 14

உதவி மேலாளர்(சட்டம்). காலியிடங்கள்: 2

தமிழ் செய்தியாளர். காலியிடங்கள்: 5

ஆங்கில செய்தியாளர். காலியிடங்கள்: 5

கணக்கு அலுவலர் நிலை-III. காலியிடங்கள்: 1

கணக்கு அலுவலர். காலியிடங்கள்: 3

உதவி மேலாளர்(கணக்கு). காலியிடங்கள்: 20

துணை மேலாளர்(கணக்கு). காலியிடங்கள்: 1

உதவி பொது மேலாளர் (நிதி).

காலியிடங்கள்: 1

உதவி பொது மேலாளர்.

காலியிடங்கள்: 1

வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்). காலியிடங்கள்: 6

உதவி இயக்குநர்(புள்ளியியல்). காலியிடங்கள்: 17

உதவி இயக்குநர்(சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை). காலியிடங்கள்: 3

முதுநிலை உதவி இயக்குநர்(கொதிகலன்கள்).

காலியிடங்கள்: 4

நிதியாளர். காலியிடங்கள்: 6

உதவி இயக்குநர்(னகர் மற்றும் ஊரமைப்பு). காலியிடங்கள்: 4

உதவி மேலாளர்(திட்டம்). காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 21 வயது பூர்த்தி அடைந்து 37 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளவும்.

குறிப்பு: செய்தியாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் எழுத்துத் தேர்வு 2 தாள்களை கொண்டது எனவும் அறிவிக்கப்படுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: எழுத்துத் தேர்விற்கு ரூ.200 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

கடைசி நாள்: ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 14.6.2024

டிஎன்பிஎஸ்சி தொழில் நுட்ப பணிகள் தேர்வு செய்யப்படும் முறை :இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர் (அரசு சட்டக் கல்லூரிகள்) பதவிக்கு மட்டும் எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும்
இப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு 2 தாள்களாக நடத்தப்படும். முதல் தாள் அனைத்து பதவிக்களுக்கும் ஒன்று. இரண்டாம் தாள் பதவிக்கு ஏற்று மாறுப்படும்.
விண்ணப்பதார்களில் தகவல்களின் அடிப்படையில் எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எழுத்து தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களின் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்டு நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தொழில் நுட்ப பணிகள் விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி தொழில் நுட்ப பணிகள் முக்கிய நாட்கள் :

விவரம்முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்14.06.2024
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய கால அளவு19.06.2024 - 21.062024
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்- தாள் 128.07.2024
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் - தாள் 212.08.2024 - 16.08.2024
நேர்காணல் தேதிபின்னர் அறிவிக்கபப்டும்

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்விற்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் முறையில் தகுந்த தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment