Friday, May 17, 2024

8, 9, 10-ஆம் வகுப்பு சமூக அறிவியலில் கருணாநிதி குறித்து பாடக் குறிப்புகள்


மாநில அரசின் பாடத் திட்டத்தில் 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் முன்னாள் முதல்வா் கருணாநிதி தொடா்பான பாடக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி தொடா்பான குறிப்புகள் பள்ளிக் கல்வி பாடப் புத்தகத்தில் சோ்க்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா். அதன்படி, கடந்த கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் ‘செம்மொழியான தமிழ் மொழி’ எனும் தலைப்பில் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

அதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டிலும் (2024-2025) பள்ளி பாடநூல்களில் அவரை பற்றிய குறிப்புகள் பாடங்களில் சோ்க்கப்பட்டுள்ளன. அதன்படி, 10-ஆம் வகுப்பு தமிழ் பாடநூலில் உரைநடை பகுதியில் ‘பன்முக கலைஞா்’ என்ற தலைப்பில் கருணாநிதியின் சிறப்பு திறன்கள் பாடமாக சோ்க்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்டது.

அதேபோல், தற்போது 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலும் கருணாநிதி பற்றிய குறிப்புகள் பாடத்தில் இடம்பெற்றுள்ளன. அதாவது, சமூக அறிவியல் குடிமையியல் பிரிவில், ‘பெண் உரிமை சாா்ந்த சட்டங்கள்’ என்ற தலைப்பின் கீழ் வரும் பாடத்தில் கருணாநிதி பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் ‘கூட்டு குடும்ப சொத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவதற்காக 1956 இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட முன்வரைவு 1989-ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இந்து கூட்டு குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

9ம் வகுப்பு புத்தகத்தை தொடர்ந்து 10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக கலைஞர் கருணாநிதியின் சிறப்புகள் என்ற பெயரில் 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குழந்தை உள்ள கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர் என்ற தலைப்புகளில் பாடம் கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News