Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 17, 2024

பள்ளிக்கல்வித் துறை உத்தரவு மனவேதனை அளிக்கிறது - உயர் நீதிமன்றம் கருத்து


அரசுப் பணியாளரை பணி ஓய்வு நாளில் பணி நீக்கம் செய்வது போன்ற மனவேதனை இருக்க முடியாது என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. பணி ஓய்வு நாளன்று பணிநீக்கம் செய்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட கிளை ஆணையிட்டுள்ளது. பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சரவணன் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

சிவகங்கை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறையில் சரவணன் என்பவர் பணியாற்றிய போது கடந்த 2022 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனால் பணிக்கொடை நிறுத்தப்பட்டதால் அவர் உயர் நீதிமன்ற மதுரை கலையில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா அவர்களிடம் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற்ற சரவணன் தனது தாய் அரசு வேலையில் உள்ளார் என்பதை மறைத்து அரசு பணி பெற்றுள்ளார் என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பணி ஓய்வு பெறும் நாளில் எந்த ஒரு அரசு ஊழியரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பணிக்கு சேர்ந்து 30 ஆண்டுகள் கழித்து ஒருவரை தற்காலிக பணிநீக்கம் செய்வது என்பது ஏற்புடையது அல்ல என்றும் குற்ற குறிப்பானை கொடுப்பது மனவேதனை ஏற்படுகிறது என்றார்.

எனவே மனுதாரரின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்தும் அவர் முறையாக ஓய்வு பெற்றதாக ஆணை வழங்கவும் பணப்பலன் வழங்கவும் பள்ளிக் கல்வித் தறைக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment