#கண்பார்வை :
தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது.
அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது
#பாதவெடிப்பு,
#சருமபிரச்சனை :
உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.
#மூட்டுவலி :
முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.
#உடல்சோர்வு :
உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.
#நரம்புபாதிப்புகள் :
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
#தேங்காய்எண்ணெய் :
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.
#விளக்கெண்ணெய்
இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.
#வேப்பெண்ணெய் :
வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.
#எலுமிச்சை எண்ணெய் :
எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.
#பாதாம் எண்ணெய் :
சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.
#ஆலிவ் எண்ணெய் :
தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.
No comments:
Post a Comment