Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 27, 2024

கலந்தாய்வு அவசர சுற்றறிக்கை

கலந்தாய்வு தென்காசி CEO அவசர சுற்றறிக்கை :

அன்பார்ந்த அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ,

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு EMIS இணைய தளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 25.05.2024 அன்றுடன் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் , பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இதுவரை சமர்ப்பிக்காத ஆசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 27.05.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதன்பின்னர் விண்ணப்பங்கள் பெறப்படும்பட்சத்தில் , அவற்றுக்கு EMIS இணைய தளத்தில் ஒப்புதல் அளித்திட இயலாது என்கிற விவரமும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கலந்தாய்வுக்கான Seniority Panel வெளியாகும்போது , அதில் தங்களுடைய விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்ட முன்னுரிமை விவரங்கள் இடம்பெறாத பட்சத்தில் , அதன் விவரத்தினை EMIS இணைய தளத்தில் தத்தமது User & Password- ஐ பயன்படுத்தி Challenge Option மூலம் உள்ளீடு செய்திடவும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News