Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 18, 2024

உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக என்டிஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு வரும் ஜூன் 16-ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கிய நெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 15-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விருப்பமுள்ள பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், விண்ணப்பங்களில் மே 21 முதல் 23-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தொடர்ந்து தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஜூன் முதல்வாரத்தில் வெளியிடப்படும்.

இதற்கான விண்ணப்பக் கட்டணம், பாடத்திட்டம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment