பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பட்டதாரி ஆசிரியர்/வட்டார வளமைய பயிற்றுநர் 2023-2024ஆம் ஆண்டில் 2222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 25-10-2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை அறிவிக்கை கடந்த 15-11-2023 அன்று வெளியிடப்பட்டது. மேலும் 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் https://www.trb.tn.gov.in/ வாயிலாக இன்று(17-05-2024) வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டிற்கு பிறகு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment