Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 30, 2024

High tech Lab -கணினி ஆசிரியர்கள் வேதனை!!!

High tech Lab -கணினி ஆசிரியர்களின் கண்ணீர் கதையும்

கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை

ஒவ்வொரு முறையும் புதிய பணியிடங்களை தோற்றுவிக்கும் பொழுது கணினி சம்பந்தப்பட்ட அனைத்து பணியிடங்களும் தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு அவர்கள் மூலமாகவே பணியமற்ற படுகிறார்கள்.

ஏன் மற்ற பாடங்களுக்கு மற்றும் ஆய்வக உதவியாளர் பணிகளுக்கு அவ்வாறு செய்வதில்லை.

அவர்களுக்கு நேரடியாக அரசே தேர்வு நடத்தி பணியாட்களை தேர்வு செய்கிறது.

இப்பொழுது அறிவித்திருக்கிற hi tech lab உதவியாளர் பணி அரசு ஏன் தனியார் மூலம் பணி அமர்த்துகிறது.

15 வருடங்கள் கழித்து இளநிலையில் கல்வியியல் கல்லூரி முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக எண்ணியிருந்தோம் ஆனால் தற்பொழுது வருத்தமளிக்கக் கூடிய நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கல்வித்துறை தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசு நிதி நிலைமைக்கு ஏற்ப நிரப்புவதாக அறிவித்திருந்தார்கள்,
நாங்கள் அரசி நிதி நிலைமையை நன்கு அறிந்திருக்கிறோம்
எனவே குறைந்த சம்பளமாக இருந்தால் கூட நிரந்தர பணியாக அரசு பணியாக நேரடியாகவே தமிழக அரசு பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள்.
தனியாருக்கு இந்த பணியிடங்களை ஒதுக்காமல் நேரடியாக அரசு பணியிடங்களாக அரசு அறிவிக்க வேண்டும்
இந்த பணியிடங்களை உடனடியாக நிறுத்தி முறையான அறிவிப்புகள் வெளியிட்டு தேர்வு முறையோ அல்லது employment seniority அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்பது கணினி ஆசிரியர்களின் கோரிக்கை

இந்த அரசு தனியார் மையத்திற்கு எதிரான அரசு என்பதை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்

விரைந்து நல்லதொரு மாற்றத்தை நீங்கள் செய்வீர்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்

2006- எல்காட்- 1880 - பணியிடங்கள் நிரப்பியது (அந்த குழப்பங்கள் சேர்ந்து நிலைமை சரியாக பல வருடங்கள் எடுத்துக் கொண்டது.)

இப்பொழுது- KELTRON
தனியார் மையத்தை கைவிடுக
அரசே பணியிடங்களை நிரப்ப வேண்டும்

எப்பொழுதுதான் கணினிக்கும் கணினி ஆசிரியர் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கும் தீர்வு கிடைக்கும்


கண்ணீர் தத்தளிக்கும் கணினி ஆசிரியர்.
P.Sathiyapriya
8525030095

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News