Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 12, 2024

ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வு கட்டுரை!


தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில்ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பக்தர்கள் கலந்து கொள்ளவும் ஆய்வு மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கும் https:/muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க வழிமுறைகள் மற்றும் தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு எழுதப்படும் கட்டுரைகளில் மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண் மற்றும் புகைப்படம் ஆகியவை இடம் பெற வேண்டும். சுருக்க குறிப்பு மற்றும் முழு கட்டுரை இணையதளம் மூலம் ஜூன் 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ் பெற்ற முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு அமைக்கப்படும். அத்துடன் சமய பெரியோர்களின் உரைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இம்மாநாட்டில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகவும், பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்களும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகம் அறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புகள் செய்யப்படும்.

முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் முருக பக்தர்கள் தங்கள் வருகையை பதிவு செய்வதற்கும், முருகப்பெருமானை கருப்பொருளாகக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் ஜூலை 15ம் தேதி தேதிக்குள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் ஜூன் 20ம் தேதிக்குள் மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News